தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய்சேதுபதி, அவரது வெற்றிப்பட இயக்குநருடன் மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த இயக்குநர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
தனது வெற்றிக் கூட்டணியுடன் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி
Published on

சீனு ராமாசாமி இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியான `தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.

அவரது நடிப்பில் கடந்த 2015-ல் வெளியான படம் `ஆரஞ்சு மிட்டாய்'. இப்படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு வசனங்களை எழுதிய விஜய் சேதுபதி, இப்படத்தில் ஒரு 57 வயது முதியவராக நடித்திருந்தார். ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்ற இப்படம், பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்நிலையில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என மூன்றையும் விஜய் சேதுபதியே எழுதவிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது, `விக்ரம் வேதா', `கருப்பன்', `96', `அநீதிக்கதைகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் `புரியாத புதிர்' படம் தயாராகி ரிலீசாகமல் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com