நிவின் பாலியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி

‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் படத்தில் அவருடன் விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
நிவின் பாலியுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி
Published on

இதை ‘36 வயதினிலே’, ‘மும்பை போலீஸ்’ புகழ் ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் இயக்குகிறார். இதில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார். புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி, சஞ்சய் ஆகியோர் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

‘காயம்குளம் கொச்சுண்ணி’, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்த ஒருவரை பற்றிய படம். இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com