திரிஷாவின் வெற்றிக்கு இதுதான் காரணம் - விஜய் சேதுபதி

சி.பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் 96 படத்தில் விஜய் சேதுபதி - திரிஷா இணைந்து நடித்திருக்கும் நிலையில், த்ரிஷாவின் வெற்றியின் ரகசியம் குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். #96TheMovie #VijaySethupathi
திரிஷாவின் வெற்றிக்கு இதுதான் காரணம் - விஜய் சேதுபதி
Published on

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘96’.

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சி.பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜனகராஜ், காளி வெங்கட், வினோதினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய் சேதுபதி 16, 36, 96 வயதுள்ள 3 கெட்-அப்களில் நடிக்கிறார். கோவிந்த் மேனன் இசையமைக்கும் இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், திரிஷாவுடன் பணிபுரிந்தது பற்றி விஜய் சேதுபதி கூறும்போது, 

‘திரிஷா நடிப்பை மிகவும் நேசிக்கிறார். எந்த காட்சியாக இருந்தாலும் அதை உணர்ந்து நடிப்பவர். அவரிடம் இருந்து நிறைய வி‌ஷயங்களை கற்றுக்கொண்டேன். ஒருநாள் கூட படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தது இல்லை. முதல் ஆளாக ஒப்பனையுடன் கேமரா முன்பு நிற்பார். இந்த தொழில் பக்தி தான் அவரை 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வைத்து இருக்கிறது’ என்று பாராட்டி உள்ளார். #96TheMovie #VijaySethupathi #Trisha

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com