சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் `சீதக்காதி' படத்தில் விஜய் சேதுபதி சினிமாவில் பெரிய நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். #Seethakaathi #VijaySethupathi
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
Published on

96 படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் படம் `சீதக்காதி'. விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடித்திருக்கிறார். கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில், இயக்குநர் மகேந்திரன், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டது. டிரைலரில் இருந்து, படத்தில் விஜய் சேதுபதி வயதான சூப்பர் ஸ்டாராக (ஐயா) வலம் வருகிறார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் நடிப்பில் இருந்து விலகும் ஐயா, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று பட அதிபர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேநேரத்தில் ஐயா, குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது போலவும் காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக வித்தியாசமான தோற்றத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சீதக்காதி, விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 96 படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கோவிந்த் மேனன் இந்த படத்திலும் உருக வைத்திருக்கிறார். சரஸ்காந்த் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். #Seethakathi #VijaySethupathi

சீதக்காதி படத்தின் டிரைலர்:

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com