சிக்கலில் சங்கத்தமிழன்- இன்று ரிலீஸ் இல்லை

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம், பணப்பிரச்சனை காரணமாக இன்று திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விஜயா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

’சங்கத்தமிழன்’ படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பண பிரச்சனை காரணமாக படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் சுமூக தீர்வு எட்டப்பட்டால் இன்று மாலை அல்லது நாளை இப்படம் ரிலீசாக கூடும் என சொல்லப்படுகிறது.

நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் ’சங்கத்தமிழன்’ படத்தை வெளியிட தடை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2013ம் ஆண்டு ரூ.15 லட்சம் வழங்க வேண்டியது தொடர்பாக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்த வழக்கில் நெல்லை நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com