மீண்டும் கடவுளாகும் விஜய் சேதுபதி?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, மீண்டும் கடவுள் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
Published on

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் காதலர் தினத்தன்று திரைக்கு வந்த படம் ‘ஓ மை கடவுளே’. காதல், பேண்டசி படமான இதை அறிமுக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது. 

இதனிடையே, இப்படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி இதன் தெலுங்கு பதிப்பையும் அஷ்வத்தே இயக்க உள்ளார்.

இந்நிலையில், ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் விஜய் சேதுபதி கடவுளாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  விஜய் சேதுபதி ஏற்கனவே தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி, உப்பென்னா போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com