பின் வாங்கிய சிவகார்த்திகேயன் - களமிறங்கும் விஜய் சேதுபதி

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’ வெளியாக இருந்த தினத்தில், விஜய் சேதுபதி படம் வெளியாக இருக்கிறது.
பின் வாங்கிய சிவகார்த்திகேயன் - களமிறங்கும் விஜய் சேதுபதி
Published on
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மோகன் ராஜா இயக்கியுள்ள இப்படம் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், படத்தின் பின்னணி வேலைகள் முடியாததால் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், அன்றைய தினத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பன்’ வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். பன்னீர் செல்வம் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே செப்டம்பர் 29ம் தேதி, ஜி.வி.பிரகாஷின் ‘செம்ம’, நயன்தாராவின் ‘அறம்’, கௌதம் கார்த்திக்கின் ‘ஹர ஹர மகாதேவகி’, சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com