திரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி

96 படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஜோடியாக பேசப்பட்ட விஜய் சேதுபதி, திரிஷா, தற்போது புதிய படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி, திரிஷா
விஜய் சேதுபதி, திரிஷா
Published on

திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கர்ஜனை’. இதில் திரிஷாவுடன் வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, தவசி, ஆரியன், அமித், லொள்ளுசபா சுவாமிநாதன், ஸ்ரீரஞ்சனி, மதுரை முத்து, ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். சுந்தர் பாலு இப்படத்தை இயக்கியிருக்கிறார். 

உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் அவர் தயங்காமல் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com