மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி?

`விக்ரம் வேதா' பட வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வந்தாலும், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி?
Published on

இதுதவிர சமந்தாவுடன் `அநீதிக்கதைகள்', த்ரிஷாவுடன் `96', கவுதம் கார்த்திக் உடன் இணைந்து `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் `சீதக்காதி' படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக மாதவன், ராம்சரண், மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. அதனை மாதவன் மறுத்திருந்தார்.

இந்நிலையில், விஜய் சேதுபதி மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வருகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மணிரத்னம் - விஜய் சேதுபதி இணைந்தால் அது ஒரு மாஸ் கூட்டணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com