கன்னடத்தில் வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி

பல படங்கள் கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, கன்னட படத்தில் வில்லனாக மிரட்ட இருக்கிறார். #VijaySethupathi
கன்னடத்தில் வில்லனாக மிரட்டும் விஜய் சேதுபதி
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘ஜுங்கா’. கோகுல் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் இவரது நடிப்பில், ‘சீதக்காதி’, ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’ உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகிறது. 

விஜய்சேதுபதி தான் இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் அதிக படங்களை கையில் வைத்திருக்கும் கதாநாயகன் இருந்து வருகிறார். அவருக்கு ஒரு வேடம் பிடித்திருந்தால் அது சிறியதாக இருந்தாலோ, வில்லனாக இருந்தாலோ கூட நடித்து விடுவார்.

தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து வருகிறார். இதையடுத்து கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். சிவ்கணேஷ் இயக்கும் அக்காடா என்ற படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் கதாநாயகனாக நடிக்க விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com