சீனாவில் ரிலீசாகும் விஜய் சேதுபதி - நயன்தாரா படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன், நாயகியாக வலம் வரும் விஜய் சேதுபதி - நயன்தாரா இணையும் அடுத்த படத்தை சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியிருக்கிறது. #VijaySethupathi #Nayanthara
சீனாவில் ரிலீசாகும் விஜய் சேதுபதி - நயன்தாரா படம்
Published on

இந்திய படங்களை வெளிநாடுகளிலும் திரையிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ரஜினி படங்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூரில் அதிக வரவேற்பை பெறுகின்றன.

ராஜமவுலி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்தன. இந்தியில் உருவான ‘டங்கல்’, ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்ஸ்’, ‘பஜ்ரங்கி பைஜான்’ படங்கள் சீனாவில் திரையிடப்பட்டன. இந்த படங்களுக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதுபோல தெலுங்கில் சிரஞ்சீவி - நயன்தாரா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தையும் சீனாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கியிக்கிறது.

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், முக்கிய வேடத்தில் நடிப்பதால் இந்த படத்துக்கு சீனாவில், ஏற்கனவே வெற்றிகரமாக ஓடிய இந்தி படங்களைப்போல இதற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இதில் விஜய்சேதுபதியும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VijaySethupathi #Nayanthara 

X

Maalai Malar
www.maalaimalar.com