நயன்தாராவுடன் இணைந்த விஜய் சேதுபதி

நானும் ரௌடி தான் படத்திற்கு பிறகு நயன்தாரா நடித்து வரும் `இமைக்கா நொடிகள்' படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார்.
நயன்தாராவுடன் இணைந்த விஜய் சேதுபதி
Published on

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். அதர்வாவின் அக்காவாக நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவின் சாதுவான கணவராக விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம்.

விஜய் சேதுபதி - நயன்தாரா ஜோடி ஏற்கனவே 'நானும் ரவுடி தான்' படத்தின் மூலம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த ஜோடி 'இமைக்கா  நொடிகள்' படத்திலும் இணைந்திருக்கிறது. அதற்காக விஜய் சேதுபதி தனது படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ரமேஷ் திலக், தேவன், உதய் மகேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு முடிந்துள்ளதால் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாக இருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com