விஜய் 64வது படத்தின் அப்டேட்

பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் விஜய் 64 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
விஜய் - லோகேஷ் கனகராஜ்
விஜய் - லோகேஷ் கனகராஜ்
Published on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசை அமைக்கும் விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு, அக்டோபரில் தொடங்குகிறது. கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. விஜய்க்கு 64வது படமாக இது உருவாக உள்ளது. இந்த நிலையில், இப்போது படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த படத்துக்காக, விஜய் இதுவரை இல்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் என்றும், அதற்காக தனியாக ஒரு மேக்கப் டெஸ்ட்டும் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், எப்போதும்போல் சென்னையில் இல்லாமல், இந்த முறை செங்கல்பட்டில் படப்பிடிப்பு நடத்தப்போவதாகவும், அதற்காக அங்கே ஒரு பிரமாண்ட செட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இந்த படத்தின் கதை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால் படத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர்களை வெவ்வேறு அணிகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒரு வேலை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், கதைக்கான ஆராய்ச்சிகளைச் செய்வது ஒரு அணியின் முக்கியக் கடமையாக இருக்கும். 

இந்த அணியில் இருப்பவர்களுக்குக்கூட கதையின் வெவ்வேறு அம்சங்கள்தான் தெரியும். இயக்குநர் தரப்பிலிருந்து ஒரு தலைப்பு தரப்படும். அதுகுறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து, இயக்குநரிடம் விளக்க வேண்டும். அதிகபட்சம் அவர்களுக்கே இவ்வளவுதான் கதை தெரியுமாம். மற்ற அணிகளுக்கெல்லாம் படத்தின் பிற வேலைகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இயக்குநர், முக்கிய நடிகர்கள், தலைமை தொழில்நுட்பக் கலைஞர்களைத் தவிர வேறு யாருக்கும் படத்தின் முழுக் கதையும் தெரியாது என்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com