அந்தப் படம் ஓடக்கூடாது - விஜய் மில்டன் ஆதங்கம்

பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், ‘கோலி சோடா’, ‘கடுகு’ படங்களை இயக்கியவருமான விஜய் மில்டன், ‘அந்தப் படம் ஓடக்கூடாது என்று வீடியோ வெளியிட்டுள்ளார். #IAMK #VijayMilton
அந்தப் படம் ஓடக்கூடாது - விஜய் மில்டன் ஆதங்கம்
Published on

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றால், ஒரு பக்கம் இப்படத்திற்கு எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

இயக்குனர் பாரதிராஜா இப்படத்தை தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தற்போது ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் அந்தப் படம் ஓடக்கூடாது என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அந்தப் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்க்கும் போதே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று நினைத்தேன். திரைத்துறையில் இருந்துக் கொண்டே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று சொல்லும் போது எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு படம் ஓடினால் தான் திரைத்துறைக்கு நல்லது. வேற யாராவது தயாரித்திருந்தால் எதுவும் தெரிந்திருக்காது. மிகவும் மதிக்கக் கூடியவரே இந்த படத்தை தயாரித்திருப்பது, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அவர்கள் சொல்லித்தான் ‘ஏ’ படம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் தப்பில்லை.

ஆனால், இந்தப்படம் ஓடக்கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பலர் வருகிறார்கள். இந்தப் படம் ஓடியது என்றால், இளைஞர்களுக்கு இதுதான் பிடிக்கும் போல, இதுதான் சினிமா என்று நினைத்துக் கொண்டு எல்லாரும் இதுபோன்ற படங்கள் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கால கட்டத்திற்கு இது சரிபட்டு வராது. 

ஏதோ பேசனும்னு தோன்றியது, பேசாமல் இருந்தால் தப்பு என்று தோன்றியது. அதான் பேசிவிட்டேன். இதனால் வரும் எதிர்வினையை சந்திக்கவும் தயார்’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com