

இதையடுத்து சமீபத்தில் பரத், ராஜ்குமாரை வைத்து ‘கடுகு’ என்ற படத்தை இயக்கியிருந்தார். சமுக அக்கறை கருத்தோடு வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தற்போது ‘கோலிசோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் விஜய் மில்டன்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. Goli Soda Two படத்தை சுருக்கமாக GST என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் வாய்ஸ் டீசர் செப்டம்பர் 8ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த வாய்ஸ் டீசருக்கு இயக்குனர் கௌதம் மேனன் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.