விஜய்யின் அறிமுகப் பாடல் ரெடி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் விஜய்க்கான அறிமுகப்பாடல் உருவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Thalapathy62
விஜய்யின் அறிமுகப் பாடல் ரெடி
Published on

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 படங்களுமே மெகா ஹிட்டானது. ஆகையால், இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

விஜய்யின் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இதற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஜெயமோகன் வசனம் எழுதவுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யின் சில காட்சிகளையும், பாடல் காட்சியையும் படமாக்கி வந்தார்கள். தற்போது அந்த பாடல் காட்சி முடிந்து விட்டதாகவும், அந்தப் பாடல், விஜய்யின் அறிமுகப் பாடல் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் 62 திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com