தமிழ் படத்தில் பைக் ரேசராகும் விஜய் தேவரகொண்டா

காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #VijayDevarkonda #AnandAnnamalai
தமிழ் படத்தில் பைக் ரேசராகும் விஜய் தேவரகொண்டா
Published on

அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா சமீபத்தில் ஆனந்த் சங்கர் இயக்கிய நோட்டா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அவர் நடிக்கும் படங்களுக்கு தமிழில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மற்றுமொரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலை இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.

விளையாட்டு சம்பந்தப்பட்ட த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேசராக நடிப்பதாகவும், இந்த படத்திற்காக தனது பயிற்சிகளை விஜய் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாளவிகா ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #VijayDevarkonda #AnandAnnamalai

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com