இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா

அர்ஜுன் ரெட்டி நாயகன் நடிகர் விஜய் தேவரகொண்டா தமிழிலில் அறிமுகமாகும் நோட்டா படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபடவிருப்பதாக தெரிவித்துள்ளார். #NOTA #VijayDevarakonda
இன்று பிரசாரத்தை துவங்குகிறார் விஜய் தேவரகொண்டா
Published on

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் ‘நோட்டா’. 

‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் மூலம் அர்ஜுன் ரெட்டி நாயகன்விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மெஹ்ரீன் பிர்சாடாவும், முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் விளம்பர பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. அதற்காக தனது பிரசாரத்தை இன்று முதல் துவங்க இருப்பதாக விஜய் தேவரகொண்டா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சாம்.சி.எஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தான கிருஷ்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தை வருகிற அக்டோபர் 4-ல் ரிலீஸ் செய்ய படக்குழு யோசித்து வருகிறது. 

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான கீதா கோவிந்தம் படம் ரூ.100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #NOTA #VijayDevarakonda #MehreenPirzada

X

Maalai Malar
www.maalaimalar.com