விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடிப்பில் காளி படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #VijayAntony #MNaveen
விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `காளி' படம் ரிலீசாக இருக்கிறது. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் மற்றும் அம்ரிதா நடித்துள்ளனர். ஆக்‌ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

விஜய் ஆண்டனி தற்போது `திமிரு புடிச்சவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை `மூடர்கூடம்' படத்தை இயக்கிய எம்.நவீன் இயக்கவிருக்கிறார். 

ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதத்தில் துவங்க இருக்கிறது. 

படத்தில் பணியாற்றவிருக்கும் நடிகர்கள், கலைஞர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில், இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #VijayAntony #MNaveen

X

Maalai Malar
www.maalaimalar.com