அரசியல் தலைவர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி

அண்ணாதுரை, காளி படத்தில் பிசியாக நடித்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்ததாக அரசியல் தலைவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
அரசியல் தலைவர் இயக்கத்தில் நடிக்கும் விஜய் ஆண்டனி
Published on
நடிகரும் இயக்குனருமான சீமான் தற்போது தீவிர அரசியலில் இருந்து வருகிறார். இவர் கடைசியாக மாதவனை வைத்து ‘வாழ்த்துகள்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்குப் பிறகு அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். தற்போது மீண்டும் படம் இயக்க இருக்கிறார் சீமான்.

இந்த புதிய படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது விஜய் ஆண்டனி ‘அண்ணாதுரை’, ‘காளி’ உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து சீமான் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அனேகமாக விஜய்யை வைத்து சீமான் இயக்குவதாக இருந்த ‘பகலவன்’ திரைப்படம் தான், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
X

Maalai Malar
www.maalaimalar.com