விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜி.சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாதுரை’ படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on
‘எமன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ மற்றும் ‘காளி’ படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘அண்ணாதுரை’ படத்தை ராதிகா சரத்குமாரின் ‘ஆர்.ஸ்டூடியோஸ்’ நிறுவனமும், விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் பட வேலைகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஜி.சீனிவாசன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக டயானா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலரை இம்மாதம் 11-ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

இந்த படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com