விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை சென்சார் ரிசல்ட்

ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாதுரை’ படத்தின் சென்சார் ரிசல்ட் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை சென்சார் ரிசல்ட்
Published on
இசையமைப்பாளராக இருந்து நடிகராகி ரசிகர்களை கவர்ந்து வருபவர் விஜய் ஆண்டனி. ‘நான்’ படம் தொடங்கி தொடர்ச்சியாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அண்ணாதுரை’. அதிரடி ஆக்‌ஷன் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அண்ணாதுரை படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘UA’  சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் முடிவடைந்ததை அடுத்து இப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வ அறிவித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் விஜய் ஆண்டனி, டயானா, மகிமா, ராதாரவி, காளி வெங்கட், உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஜி.சீனிவாசன் இயக்கியுள்ளார். ராதிகா சரத்குமாருடன் இணைந்து விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.
X

Maalai Malar
www.maalaimalar.com