எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்

இயக்குனர் விக்னேஷ் சிவன், தன்னுடைய திருமண ஆசையை வெளிப்படையாக சொல்லி, நயன்தாராவின் முடிவுக்காக காத்திருக்கிறார். #VigneshShivn #Nayanthara
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
Published on

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இருவரும் ஜோடியாக பல நாடுகளை சுற்றி வருகிறார்கள். சென்னையில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்ற பாடல் நேற்று வெளியானது. அனிருத் இசையில், சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில் வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த பாடல் வரியான ‘எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சி டி’ என்று பதிவு செய்து, வெய்ட் பண்ணவா என்று கேள்வி கேட்டிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மேலும் தங்கள் பெரியரின் முதல் எழுத்துடன் கூடிய தொப்பியை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். #VigneshShivn #Nayanthara

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com