

ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தை அமெரிக்காவில் கொண்டாடி விட்டு வந்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டனர்.
தற்போது மீண்டும் அமெரிக்கா சென்று இருக்கிறார்கள். அங்கு பல இடங்களில் ஜோடியாக சுற்றுகிறார்கள். இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட படங்களை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
நயன்தாரா ஏற்கனவே நடிகர் சிம்புவை காதலித்தார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்தது. இருவரும் நெருங்கி பழகினார்கள். திருமணத்துக்கும் தயாரானார்கள். இதற்காக நயன்தாரா மதம் மாறவும் செய்தார். ஆனால் அந்த காதலும் முறிந்துவிட்டது.