சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்: வித்யாபாலன்

மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை வித்யாபாலன் சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன் என்று கூறியிருக்கிறார்.
சினிமாவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல பாடுபடுவேன்: வித்யாபாலன்
Published on

இந்தி நடிகை வித்யாபாலன் தற்போது ‘தும்ஹாரிசுலு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வித்யாபாலன் வெளியிட்டுள்ள செய்தியில்...

‘மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் உறுப்பினர் என்ற முறையில் எனது பொறுப்புகளை திறமையாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தற்போது நமது சினிமா சமுதாயத்தின் உணர்வுகள், யதார்த்தங்கள், பிரச்சினைகளை பேசி வருகிறது. இதனை முன்னேற்றமான புதிய பாதைக்கு எடுத்துச் செல்ல பாடுபடுவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com