ஹிலாரி கிளிண்டனை சந்தித்த வித்யா பாலன்

அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை பாலிவுட் நடிகை வித்யா பாலன் சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். #VidyaBalan #HillaryClinton
ஹிலாரி கிளிண்டனை சந்தித்த வித்யா பாலன்
Published on

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. அம்பானி வீட்டுத் திருமணத்தில் வித்யா பாலன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதனுடன், ‘விலைமதிப்பற்ற புகைப்படம். நன்றி ஸ்மிருதி இராணி. எனக்கு ஹிலாரி கிளிண்டனை மிகவும் பிடிக்கும். விடாமுயற்சி கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரி வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.

சில நாட்களுக்குப் பிறகுதான் எனக்குப் புரிந்தது. ஒரு கண்ணாடி மேற்கூரையை உடைத்தால் மட்டுமே வானத்தை அடைய முடியும் என்று. அவர் நமக்காக உடைத்துள்ளார். எதிர்காலத்தில் யாராவது ஒருவர் நிச்சயம் வானத்தை அடைவார். 

உங்களுக்கு அவரைப் பிடிக்காமல் போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவ்வளவுதான் நீங்கள் அவரைக் கணித்துள்ளீர்கள். எங்களுக்கு ஒரு ஹீரோவாக இருப்பதற்கு நன்றி ஹிலாரி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com