ஜோதிகாவின் அடுத்த படத்தில் வித்தார்த்

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வித்தார்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Vidharth
ஜோதிகாவின் அடுத்த படத்தில் வித்தார்த்
Published on

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களுள் ஒருவர் வித்தார்த். இவரது நடிப்பில் வெளியான ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை படங்கள் பேசும்படியாக அமைந்தது. வித்தார்த் கடைசியாக கொடிவீரன் படத்தில் நடித்திருந்தார். 

இந்நிலையில், அடுத்ததாக ராதா மோகன் இயக்கத்தில் ‘தும்ஹரி சுளு’ படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் வித்தியா பாலன் நடித்த கதாபாத்திரத்தில் திருமணமான, நடுத்தர வயதுப் பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார். அவரின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும். மொழி படத்திற்கு பிறகு ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்க இருக்கிறார். 

பொஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Vidharth #TumhariSulu #Jyothika 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com