வித்தியாசமாக வண்டி ஓட்டி வரும் விதார்த்

வித்தார்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தை அடுத்து ‘வண்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வித்தியாசமாக வண்டி ஓட்டி வரும் விதார்த்
Published on
‘மைனா’ படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் விதார்த். பிரபு சாலமன் இயக்கி இருந்த இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். இப்படத்தில் விதார்த்தின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இப்படத்திற்காக பல விருதுகளும் பெற்றார்.

இப்படத்திற்கு பல படங்களில் நடித்தாலும், ‘ஆள்’, ‘காடு’, ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவரது நடிப்பில் ‘குரங்கு பொம்மை’ நாளை வெளியாக இருக்கிறது. இப்படம் வெளியாகும் முன்பே இப்படத்தை பற்றி பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், வித்தார்த்தின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.


விதார்த் அடுத்ததாக ‘வண்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜேஷ் பாலா இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இன்று வெளியிட்டுள்ளார். வித்தியாசமாகவும், மிகவும் கவரும்படியாக உள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com