தெலுங்கு பட நாயகியை இலங்கை அழைத்து செல்லும் வைபவ்

‘காட்டேரி’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை செல்லவிருப்பதாகவும், அங்கு வைபவ், மணாலி ரதோட் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. #Kateri #Vaibhav
தெலுங்கு பட நாயகியை இலங்கை அழைத்து செல்லும் வைபவ்
Published on

`ஆர்.கே.நகர்' படத்தை தொடர்ந்து வைபவ் அடுத்ததாக ‘காட்டேரி’ என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சமி சரத்குமார் ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வைபவ் மற்றும் மணாலி ரதோட் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மணாலி ரதோட் தெலுங்கில் ஒருசில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்த படத்தை ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களை இயக்கிய டீகே இயக்குகிறார். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப்’ புகழ் சாரா உள்பட பலரும் நடிக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். 

விக்கி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள காமெடி கலந்த திகில், த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக இருக்கிறது. #Kateri #Vaibhav

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com