நடிகராக உனக்கு பெரிய இடம் காத்திருக்கிறது - வெற்றிமாறனிடம் பாராட்டைப் பெற்ற நடிகர்

வடசென்னை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் பாவல் நவகீதனின் நடிப்பை பாராட்டிய இயக்குநர் வெற்றிமாறன், அவருக்கு நடிகராக ஒரு பெரிய இடம் காத்திருப்பதாக கூறியுள்ளார். #VadaChennai
நடிகராக உனக்கு பெரிய இடம் காத்திருக்கிறது - வெற்றிமாறனிடம் பாராட்டைப் பெற்ற நடிகர்
Published on

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வடசென்னை. பொதுவாக வெற்றிமாறன் எந்த நடிகரையும் பாராட்ட மாட்டார்.

ஒரு நடிகர் நன்றாக நடித்தால் அவரது வேடம் பெரிதாகி விடும். அப்படி அமீரின் வேடம் பெரிய கதாபாத்திரமாக மாறியுள்ளது. இதேபோல் பாவல் நவகீதன் என்ற நடிகரின் வேடமும் பெரிதாகி உள்ளது. மெட்ராஸ், குற்றம் கடிதல், மகளிர் மட்டும் படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் பாவல் நவகீதன். அடிப்படையில் டைரக்டரான இவர் இப்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது ’உதவி இயக்குனராக வந்த என்னை மெட்ராஸ் படத்தில் நடிக்க வைத்தவர் ரஞ்சித் தான். விஜி என்ற அந்த வேடம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. வடசென்னை படம் எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். வித்தியாசமான வில்லன் வேடம். வடசென்னை படம் தான் நான் டைரக்டர் ஆவதா? இல்லை நடிகராக தொடர்வதா என்பதை முடிவு செய்யும் என்று வெற்றிமாறனிடம் கூறினேன். அவர் என்னிடம் ‘உனக்கு நடிகராக ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. சிறப்பாக நடித்துள்ளாய்.

எனவே நடிகராக உனது கேரியரை தொடர்ந்து அமைத்துக்கொள். பின்னர் டைரக்டர் ஆகலாம் என்றார். இந்த படத்தில் ஒரிஜினலாக சில இடங்களில் வெட்டு விழுந்து ரத்தம் கொட்டியிருக்கிறது. அதோடு நடித்திருக்கிறேன்.’ என்றார். #VadaChennai #Dhanush #PavelNavageethan

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com