சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்

‘கன்னிராசி’, ‘களவாணி-2’ படங்களை தொடர்ந்து விமல் அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vemal #Vadivelu
சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்
Published on

விமல் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மன்னர் வகையறா’ படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து விமல் நடிப்பில் ‘கன்னிராசி’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விமல் அடுத்ததாக சற்குணம் இயக்கத்தில் ‘களவாணி-2’ படத்தில் பிசியாகி விட்டார்.

படஅதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு தடைபட்ட நிலையில், வருகிற மே 3-ஆம் தேதி படப்பிடிப்பு மீண்டும் துவங்குகிறது. இந்த படத்திற்கு பிறகு விமல் அடுத்ததாக, எழில் இயக்கத்தில் மறுபடியும் நடிக்க இருக்கிறார். 

அதே நேரத்தில் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாக இருக்கிறார். அந்த படத்தில் விமலுடன் வைக்கைப் புயல் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் இந்த படத்தில் விமல் - வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர, `வெற்றிவேல்' பட இயக்குநர் வசந்தமணி இயக்கத்திலும், `தமிழன்' பட இயக்குநர் மஜித் இயக்கத்திலும் விமல் நடிக்க இருக்கிறார். அதுமட்டுமின்றி `மன்னர் வகையறா' படத்தை இயக்கிய பூபதி பாண்டியன் இயக்கத்திலும் விமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vemal #Vadivelu

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com