வேலைக்காரன் படத்தின் சென்சார் ரிசல்ட்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும், ‘வேலைக்காரன்’ படத்தின் சென்சார் ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

‘ரெமோ’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசில், பிரகாஷ் ராஜ், சினேகா, தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்.ஜே.பாலாஜி, ரோபா சங்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்து படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருக்கின்றனர்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து, டிசம்பர் 22ம் தேதி படம் வெளியாவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com