வேலை இல்லா விவசாயி

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘வேலையில்லா விவசாயி’ படத்தின் முன்னோட்டம்.
வேலை இல்லா விவசாயி
Published on

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘வேலையில்லா விவசாயி’.

இதில் கதாநாயகியாக பிஸ்மயா நடிக்கிறார். இவர்களுடன் வாகை சந்திரசேகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ராசாமதி, குணசேகரன். கே,கலை - சகு, எடிட்டிங் - என். கணேஷ்குமார், ராமர்.ஆர்., நடனம் - பாபி ஆண்டனி, ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், தயாரிப்பு - பிரசாத் பிக்சர்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு, இயக்கம்-பி.ஆர்.பிரசாத்.

படம் பற்றி அவர் கூறும் போது...

“விவசாய நிலங்கள் எல்லாம் பங்களாக்களாக மாறி விட்டன. எல்லாம் இருக்கிறது. சோறு தான் இல்லை என்கிற சோகம் அடுத்த தலைமுறை மக்களின் குரலாக ஒலிக்கப் போகிறது.

ஐய்யோ தவறு செய்துவிட்டோமே என்று நாம் அப்போது காலம் கடந்து யோசிக்கப் போகிறோம். எந்த தொழில் புரட்சியும் பசியை போக்காது.

பூமியை மலடாக்கி விட்டு மாட மாளிகை கட்டி என்ன பயன். ஊருக்கெல்லாம் சோறு போட்ட நாம், அரிசியையும் பருப்பையும் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம்.

பண்ணையாராகவும் விவசாயியாகவும் பெருமையாக வலம் வந்த பல பேரை பங்களா வாட்ச் மேனாகவும், ஏ.டி.எம் வாட்ச் மேனாகவும் பார்த்திருக்கிறேன். இதையெல்லாம் விவசாயியின் குரலாக இதில் பதிவு செய்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com