‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் அஜித். இந்த புதிய படத்திற்கு ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். அஜித்தின் 58வது படமாக உருவாகும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த சில படங்களாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடித்த வந்த அஜித் இந்தப்படத்தில் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் அஜித்தை வித்தியாசமான ஸ்டைலில் மாற்றி காண்பிக்க இருக்கிறார் இயக்குனர் சிவா. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருக்கிறது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் அப்படத்தின் செய்திகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால் அஜித்துடன் ‘வீரம்’ படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா தற்போது, ‘விஸ்வாசம்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த தகவலை நடிகர் பாலாவே மலையாள சினிமாவின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.