வீரா

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், கிருஷ்ணா கதாநாயகனாவும், ஐஸ்வர்யா மேனன் கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘வீரா’ படத்தின் முன்னோட்டம்.
வீரா
Published on

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘வீரா’. இதில் நாயகனாக கிருஷ்ணா, நாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பிராமையா, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ராதாரவி, நரேன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு -ஏ.குமரன், விக்னேஷ் வாசு, பாடல்களுக்கு இசை- லியோன் ஜேம்ஸ், பின்னணி இசை- எஸ்.என்.பிரசாத், எழுத்து -பாக்கியம் ‌ஷங்கர், இயக்கம்- ராஜாராமன், ஆக்‌ஷன், காமெடி கலந்த படமாக இது உருவாகி உள்ளது. ‘ஆரஞ்சு கிரியே‌ஷன்ஸ்’ நிறுவனம் ‘வன்சன் மூவிஸ்’ நிறுவனத்தோடு இணைந்து வீரா படத்தை வெளியிடுகிறது.

இதுபற்றி ஆரஞ்சு கிரியே‌ஷன்ஸ் தலைவர் கூறும்போது...

“ஒரு படத்தின் கதையையும் அது படமாக்கப்பட்டுள்ள விதத்தையும் தரத்தையும் வைத்து தான் நாங்கள் அதை வாங்குவோம். அந்த வகையில் ‘வீரா’, கதையம் சத்திலும், படமாக்கப்பட்டுள்ள விதத்திலும் எங்களை மிகவும் கவர்ந்தது. எங்கள் வெற்றிப்பட பட்டியலில் சேர்வதற்கான அனைத்து அம்சங்களும் ‘வீரா’வில் உள்ளதாக நம்புகிறோம்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com