வர்மா படத்தின் தலைப்பு மாற்றம் - படக்குழுவினர் பற்றிய முழு விவரம்

துருவ் விக்ரம் நடிப்பில் மீண்டும் உருவாக இருக்கும் அர்ஜுன் ரெட்டி ரீமேக் படத்திற்கு தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. #DhruvVikram #Varma #ArjunReddy
வர்மா படத்தின் தலைப்பு மாற்றம் - படக்குழுவினர் பற்றிய முழு விவரம்
Published on

ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படம், ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் படமானது. அதில், நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்க, பாலா டைரக்டு செய்தார். படம் முடிவடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ‘வர்மா’ படத்தை கைவிடுவதாக அறிவித்து, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

‘வர்மா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றும், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இருந்த உயிரோட்டம், ‘வர்மா’ படத்தில் இல்லை என்றும் கூறியதுடன், ‘வர்மா’ படத்தை வேறு ஒரு டைரக்டரின் இயக்கத்தில் திரும்ப எடுக்கப் போவதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். கதாநாயகன் துருவ்வை தவிர, மற்ற நடிகர்-நடிகைகள் அனைவரையும் மாற்றப்போவதாகவும் அவர் கூறினார்.

தற்போது இப்படத்திற்கு ‘ஆதித்ய வர்மா’ என்று தலைப்பு வைத்து படக்குழுவினர் பற்றிய விவரங்களையும் வெளியிட்டுள்ளனர். இதில் நாயகிகளாக பனிதா சந்து, பிரியா ஆனந்த் நடிக்கிறார்கள். கிரிசாயா இப்படத்தை இயக்குகிறார். ரவி கே சந்திரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இ4 நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com