பொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு

2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீசாகவிருக்கும் நிலையில், சிம்பு நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கல் ரிலீசில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது. #STR #VanthaRajavathanVaruven
பொங்கல் போட்டியில் இருந்து விலகிய சிம்பு
Published on

பொங்கல் வெளியீடாக ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் வெளியாக இருக்கின்றன. பேட்ட படத்துக்கு இசை வெளியீடு முடிந்து விளம்பரப் பணிகள் தொடங்கிவிட்டன. ஆனால், ‘விஸ்வாசம்’ தொடர்பாக இதுவரை பாடலோ, டீசரோ வெளியிடப்படவில்லை. இந்த வாரம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால், பொங்கலுக்கு வருவதாகச் சொன்ன சிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் முடியவில்லை. அத்துடன் ரஜினி, அஜித் படங்கள் வெளியாவதால் திரையரங்குகளும் போதிய அளவில் கிடைக்காது என்பதால், பொங்கல் போட்டியில் இருந்து இந்தப் படம் விலகி இருக்கிறது. 

சுந்தர்.சி இயக்கிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படம், பவன் கல்யாண் நடித்த ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். சிம்பு ஜோடியாக கேத்ரின் தெரேசா, மேகா ஆகாஷ் நடிக்கின்றனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். 

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டபோது ‘பொங்கல் வெளியீடு’ என குறிப்பிட்டார்கள். ஆனால் ‘பேட்ட’ படத்தின் பொங்கல் வெளியீடு அறிவிப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட டீசரில் விரைவில் வெளியீடு என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம் பொங்கல் வெளியீட்டிலிருந்து ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ விலகி உள்ளது உறுதியாகி இருக்கிறது. #STR #VanthaRajavathanVaruven

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com