லட்சுமி ராமகிருஷ்ணனுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வனிதா - வைரலாகும் வீடியோ

நேரலை நிகழ்ச்சியில் லட்சுமி ராமகிருஷ்ணனுடன் நடிகை வனிதா வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா
லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதா
Published on

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை அடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல் திருமணம் செய்து கொண்டதாகவும், மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.  பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா, சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், பணத்திற்காக அவர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் கொடுத்திருக்கும் செய்தியை அறிந்த நடிகையும், இயக்குநருமான  லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில், பீட்டர்பாலுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் விவாகரத்தாகவில்லை. வனிதா - பீட்டர் பால் திருமணம் முடியும் வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்த வனிதா, இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம். மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில் வனிதாவும், லட்சுமி ராமகிருஷ்ணனும் தனியார் இணைய ஊடகம் நடத்திய விவாத நிகழ்ச்சியில் வீட்டில் இருந்தபடியே கலந்துகொண்டனர். அப்போது  இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசிக்கொண்டது சர்ச்சையானது. இது தொடர்பான வீடியோவை வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com