காட்டேரியை கதம் செய்த வைபவ்

வைபவ் நடிப்பில் `ஆர்.கே.நகர்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், வைபவ் நடிப்பில் உருவாகி வந்த `காட்டேரி' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Katteri #Vaibhav
காட்டேரியை கதம் செய்த வைபவ்
Published on

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காட்டேரி’. ‘யாமிருக்க பயமே’ படத்தை இயக்கிய டீகே இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 

அவருக்கு ஜோடியாக வரலட்சமி சரத்குமார் ஆத்மிகா, சோனம் பஜ்வா மற்றும் மணாலி ரதோட் நடிக்கின்றனர். கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூடியூப் ’ புகழ் சாரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

காமெடி கலந்த திரில்லர் படமாக உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். எஸ்.என்.பிரசாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு விக்கி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விரைவில் துவங்க இருப்பதாகவும், படம் வருகிற அக்டோபரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

வைபவ் நடித்துள்ள `ஆர்.கே.நகர்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Katteri #Vaibhav

X

Maalai Malar
www.maalaimalar.com