வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை இயக்கப்போவது இவர்தான்

நகைச்சுவை நடிகர் வடிவேலு அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வடிவேலு
வடிவேலு
Published on

நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஓப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை. கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பட வேலைகள் கொரோனாவால் தடைபட்டுள்ளது.

இந்த நிலையில் தலைநகரம், படிக்காதவன், மருதமலை போன்ற படங்களை இயக்கிய சுராஜ் இயக்கும் புதிய படத்தில் வடிவேலு ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிந்ததும் தொடங்கும் முடிவில் இருந்த நிலையில், வடிவேலு திடீரென்று சினிமாவுக்கு பதில் வெப் தொடராக அதை எடுக்கும்படி சுராஜிடம் கூறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கதையில் சில மாற்றங்கள் செய்து வெப் தொடருக்கு தகுந்தாற்போல் கதையை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. காமெடி கலந்த பேய்க்கதையாக உருவாகும் இந்த வெப் தொடர் ஒன்பது எபிசோடுகளாக உருவாகிறது. 

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com