வானம் கொட்டட்டும்
சினிமா
வானம் கொட்டட்டும் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியீடு
விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் வானம் கொட்டட்டும் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இப்படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா சரத்குமார், நந்தா, சாந்தனு, உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தனா இயக்கி வரும் இப்படத்திற்கு சித் ஸ்ரீராம் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசரை வரும் ஜனவரி 8ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

