உறியடி 2

விஜய் குமார் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகி இருக்கும் `உறியடி 2' படத்தின் முன்னோட்டம். #Uriyadi2 #VijayKumar
உறியடி 2
Published on

2டி என்டர்டெயிண்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `உறியடி 2'.

விஜய் குமார் நாயகனாகவும், விஸ்மயா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சுதாகர், ஷங்கர் தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு - பிரவீன் குமார்.என், இசை - கோவிந்த் வசந்தா, படத்தொகுப்பு - லினு.எம், கலை - ஏழுமலை ஆதிகேசவன், சண்டைப்பயிற்சி - விக்கி, ஒலி வடிவமைப்பு - ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பாடல்கள் - விஜய் குமார் & நாகராஜி, வி.எஃப்.எக்ஸ் - ரமேஷ் ராவ் & ஜஹிர் அஹமத், ஆடை வடிவமைப்பு - ஆர்.கீர்த்திவாசன், தயாரிப்பு மேற்பார்வை - பி.செந்தில் குமார், தயாரிப்பு மேலாளர் - விஜய்.ச, இணை தயாரிப்பு - ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன் & விஜய் குமார், தயாரிப்பு - சூர்யா, எழுத்து & இயக்கம் - விஜய் குமார்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது,

"தற்போதைய சமூகத்தில் சாதிப்பிரிவினை தான் பெரும் பிரச்சனை. அதுதான் உறியடி, உறியடி 2 வருவதற்கான காரணம். எனக்குக் கம்யூனிச சிந்தனையோ, புத்தகம் படிக்கிற பழக்கமோ இல்லை. எனக்கு ரொம்ப பிடிச்சது சினிமா. அதை ஆத்மார்த்தமா கொடுக்கிறது தான் என் திறமைக்கு நான் கொடுக்குற மரியாதை. களத்துல இறங்கி மக்களுக்காக நான் எதுவும் செய்யவில்லை. ஆனா, மக்களைச் சுலபமா அணுகுற விசயம் சினிமா. சாதி அரசியலையும், சாதிய ஒடுக்கு முறைகளையும் கேள்வி கேட்டு அதற்கான தீர்வைச் சொல்லும் படமாக உறியடி 2 வந்துள்ளது.

இந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் வேறுவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், சுதாகர் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள். உறியடியில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் இதிலும் பணிபுரிந்துள்ளனர் என்றார்.

படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Uriyadi2 #VijayKumar #Vismaya

உறியடி 2 டிரைலர்:

X

Maalai Malar
www.maalaimalar.com