விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் முக்கிய அப்டேட்

விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா நடிப்பில் உருவாகி வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்தின் முக்கிய அப்டேட்
Published on

கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் ‘ஸ்கெட்ச்’.

இதில் விக்ரம் நாயகனாகவும், தமன்னா நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, உள்பட பலர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா நடிக்கிறார்.

விஜயசந்தர் இயக்கியுள்ள இந்த படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

வடசென்னையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் ‘டப்பிங்’ பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

எஸ்.தமன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதம் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் பாடிய `கனவே கனவே' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com