‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு

முத்தையா இயக்கத்தில் சசிகுமார் - மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடிவீரன்’ படத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
‘கொடிவீரன்’ படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
Published on

காதல், சென்டிமென்ட், கோபம் என கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் சசிகுமாருடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் ஒரு முக்கியமான வில்லத்தனம் கலந்த வேடத்தில் பசுபதி நடித்திருக்கிறார்.

சசிகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். 

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com