நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் புகுந்து வாலிபர் ரகளை: கார் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல்

ஐதராபாத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் புகுந்து வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். கார் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் ஸ்ரீகாந்த் வீட்டில் புகுந்து வாலிபர் ரகளை: கார் கண்ணாடிகளை உடைத்து தாக்குதல்
Published on

பின்னர் வீட்டுக்குள் சென்ற அவர் ஸ்ரீகாந்தின் படுக்கையறைக்குள் ஓடினார். அப்போது மாடிபடியில் இறங்கி வந்த ஸ்ரீகாந்தை திடீரென்று கட்டி பிடித்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீகாந்த், வாலிபரை விலக்க முயன்றார். அப்போது ஸ்ரீகாந்த்தை கீழே தள்ளிவிட்டார். உடனே அந்த வாலிபர் அரைக்குள் சென்று மறைந்து கொண்டார்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து வாலிபரை மீட்க முயன்றனர். ஆனால் போலீசாரிடம் சிக்காமல் ஒருமணி நேரம் வாலிபர் அங்கும் இங்கும் ஓடினார். நீண்ட போராட்டத்துக்கு பிறகு வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர் கர்னூலை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும் 3 மாதத்துக்கு முன்பு ஸ்ரீகாந்த் வீட்டில் சமையல் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com