தினேஷ் - நந்திதாவின் `உள்குத்து' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் - நந்திதா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் `உள்குத்து' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தினேஷ் - நந்திதாவின் `உள்குத்து' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

'திருடன் போலீஸ்' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்திக் ராஜு தினேஷை இயக்குகிறார். அதேபோல் 'அட்டகத்தி' படத்திற்கு பிறகு தினேஷும் - நந்திதாவும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் சரத் லோகிதஸ்வா, பால சரவணன், சாயா சிங், திலீப் சுப்பராயன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன். செஃப் தாமோதரன் உள்ளிட் பலரும் நடித்திருக்கின்றனர்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

'பி.கே.பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி மாதம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்', சந்தானத்தின் `சக்க போடு போடு ராஜா' உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com