`உள்குத்து' படத்தின் புதிய ரிலீஸ் அறிவிப்பு

கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் - நந்திதா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் `உள்குத்து' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
`உள்குத்து' படத்தின் புதிய ரிலீஸ் அறிவிப்பு
Published on

கார்த்திக் ராஜு இயக்கத்தில் தினேஷ் - நந்திதா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் `உள்குத்து'. 

`திருடன் போலீஸ்' படத்தை தொடர்ந்து, இரண்டாவது முறையாக கார்த்திக் ராஜு - தினேஷ் இணைந்துள்ளனர். அதேபோல் 'அட்டகத்தி' படத்திற்கு பிறகு தினேஷும் - நந்திதாவும் இரண்டாவது முறையாக இணைந்திருக்கின்றனர். இவர்களுடன் சரத் லோகிதஸ்வா, பால சரவணன், சாயா சிங், திலீப் சுப்பராயன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், ஸ்ரீமன், செஃப் தாமோதரன் உள்ளிட் பலரும் நடித்துள்ளனர். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

'பி.கே.பிலிம் பேக்டரி' சார்பில் ஜி.விட்டல் குமார், ஜி.சுபாஷினி தேவி தயாரித்துள்ள இந்த படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்தை வருகிற டிசம்பர் 29-ஆம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அதேநாளில் தான் ஜெய் நடிப்பில் பலூன், பிரபு தேவாவின் களவாடிய பொழுதுகள், சங்குசக்கரம் உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com