கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி

ஜெயலலிதாவை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருணாநிதி
கருணாநிதி
Published on

இந்திய சினிமாவில் சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை விட அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படங்களாக மாறும்போது சர்ச்சையாகின்றன. மன்மோகன் சிங், மோடி ஆகியோரின் வாழ்க்கையும் படமாக்கப்பட்டன.

தமிழில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமாக்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையையும் படமாக்க முயற்சிகள் நடக்கின்றன. என் காதலி சீன் போடுறா படத்தை இயக்கிய ராம்சிவா இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

‘அரசியலில் வரலாற்றுச் சாதனை படைத்த கலைஞர் மு.கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இந்தப் படத்தில் கலைஞராக அவரது பேரன் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளேன். இது குறித்து அவரிடம் நேர ஒதுக்கீடு பெற்று கட்டாயம் உதயநிதி ஸ்டாலின் மூலம் கலைஞரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் எடுக்கப்படும்’ என்று இயக்குனர் ராம்சிவா கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com