சாமி படத்தில் இருந்து மாமி விலகல்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘சாமி’ படத்தில் இருந்து மாமியாக நடித்த திரிஷா, தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
சாமி படத்தில் இருந்து மாமி விலகல்
Published on

இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தற்போது விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து திரிஷா விலகி உள்ளார்.

தன் கேரக்டரில் வலுவில்லை என்ற காரணத்தினால் இப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக திரிஷா கூறியுள்ளார். மேலும் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார் திரிஷா.

X

Maalai Malar
www.maalaimalar.com