சினிமா
திரிஷா படத்தின் புதிய அப்டேட்
ஆர்.மாதேஷ் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மோகினி’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. மேலும் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ ஆகிய மூன்று படங்களை முடித்தார் திரிஷா. இதில் மோகினி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.
ஹாரர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஆர்.மாதேஷ் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விவேக் மெர்வின் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதிகளை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

‘மோகினி’யின் டிரைலர் நாளை மறுநாள் (21-12-17) வெளியாகவிருக்கிறது. இதனை தொடர்ந்து இப்படத்தின் பாடல்களை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சிறிய இடைவெளிக்கு பிறகு மாதேஷ் இயக்கி வரும் இந்த படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.